Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இதுவொரு அரசியல் விளையாட்டு! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை- நந்தகுமார்

February 12, 2018 4:28 PM
9 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் தாங்கள் ஆட்சிகொள்ள கூடியவகையில் யார் உடனாவது கைகோர்த்து ஆட்சிகளை பிடித்துக்கொள்வது அவர்களின் விளையாட்டாகும். இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஏதும் இல்லை என ஹட்டன், டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா, மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி நுவரெலியா மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது. நுவரெலியா மாநகர சபை தனியாட்சியாகவும், மஸ்கெலியா பிரதேச சபை, ஹட்டன் டிக்கோயா நகர சபை, நுவரெலியா பிரதே சபை ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.

ஆனால் தற்பொழுது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர அனைத்து உள்ளூராட்சி சபைகளையும், மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்த சட்டத்தின் ஊடாக இவர்கள் இவ்வாறு இந்த சபைகளை கைப்பற்றியுள்ளார்கள் என்பது எனக்கு தெரிந்த சட்டத்தின் படி தெரியவில்லை.

ஹட்டன், டிக்கோயா நகர சபை, மஸ்கெலியா பிரதேச சபை ஆகியவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்வதற்கு நடவடிக்கைகளை உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா பிரதேச சபையின் ஆட்சியையும் கைப்பற்றும். ஏனைய சபைகளை கைப்பற்றுவதற்கு மற்ற கட்சிகளுடன் உயர் மட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கு 52 வீதம் வெற்றியினை சபையில் பெற்றிருந்தார். இதனை அந்த சபையின் தலைவர் அல்லது உப தலைவர் ஊடாக யார் ஆட்சியமைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கிடைத்த போனஸ் ஆசனங்களை வைத்துக்கொண்டு ஒரு கட்சியில் இணைந்து ஆட்சியை பிடிப்பது இவர்களின் தேர்தல் கால விளையாட்டாகும்.

ஆனால் மஸ்கெலியா பிரதே சபை, ஹட்டன் நகர சபை ஆகியவற்றை தனி அதிகாரத்துடன் நாம் ஆட்சியமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0