வீரகெடிய பொலிஸ் பிரிவின் தங்காலை வீதி, வீரகெடிய பகுதியில், இன்று அதிகாலை 01.00 மணியளவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று இரவு மண்டாடுவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்புகையிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இவர் தங்காலை – பஹலகொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஒருவராகும்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலை செய்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை வீரகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதாரம்: athirady.com