Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இங்­கி­ரிய, எது­ரா­கல பகு­தியில் கசிப்பு பாவனை அதி­க­ரிப்பு..!!

October 10, 2017 5:32 AM
1 0

களுத்­துறை, இங்­கி­ரிய, எது­ரா­கல பகு­தியில் நாளுக்கு நாள் கசிப்பு பாவனை அதி­க­ரித்து வரு­வதால் குறித்த பகு­தியில் அமை­தி­யின்மை ஏற்­பட்டு வரு­வது குறித்து தோட்ட மக்கள் மிகுந்த அதி­ருப்­தியும் கவ­லையும் தெரி­விக்­கின்­றனர்.

தோட்­டத்தில் வசித்து வரும் சிலர் தினமும் வெளியில் சென்று பொதி­செய்­யப்­பட்ட அரை­போத்தல் கொள்ளளவு அடங்­கிய கசிப்பினை கள­வாகக் கொண்டு வந்து தாமும் குடித்து மற்­ற­வர்­க­ளுக்கும் விற்­பனை செய்­வதால் பிர­தே­சத்தில் அமை­தி­யின்­மையும் சச்­ச­ர­வு­களும் ஏற்­ப­டு­வ­தாக மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

கசிப்பு பாவனை அதி­க­ரித்து வருதால் குடும்­பங்­களில் அமை­தி­யின்­மையும் மோதல்­களும் ஏற்­பட்டு வரு­வ­தாக மக்கள் மேலும் சுட்­டி­க்காட்­டு­கின்­றனர்.

சில தந்­தை­மார் குடி­போ­தைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளதால் பாட­சா­லைக்குச் செல்லும் அவர்­களின் பிள்­ளைகள் மிகுந்த விரக்­தி­ய­டைந்து சமூ­கத்­துக்கு முகம் கொடுக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஆகையால் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் இது குறித்து கவனம் செலுத்தி சமூ­கத்தை அழி­வுக்கு இட்டுச் செல்லும் கசிப்பு பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0