Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அலோஸியஸ், பலிசேனவை சந்திக்க சென்றோரின் பெயர்களை வெளியிடவும்: அநுரகுமார

February 6, 2018 4:56 PM
5 0

அர்ஜுன் அலோஸியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை சந்தித்தவர்களின் பெயர் விவரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி விநியோக அறிக்கை தொடர்பான விசேட விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி தொடர்பில் பெப்பர்ச்சுவல் ட்ரெசறீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் ஆலோஸியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிபபாளர் கசுன் பலிசேன ஆகியோர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்களை சந்திக்கச் சென்றவர்களின் பெயர்பட்டியலை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0