Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.!! (படங்கள்)

January 15, 2019 5:16 AM
172 0
அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.!! (படங்கள்)

2019 ஆம் ஆண்டுக்கான நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (13.01.2019) அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின்; இறுதிப் போட்டியில் அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகம் விளையாடியது. இப்போட்டியில் அரியாலை ஸ்ரீ கலைமகள் விளையாட்டுக் கழகம் 09:25ரூபவ் 29:27ரூபவ் 15:11 என்ற ரீதியில் (2:1) வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டிற்கான வெற்றிக் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0