Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு!

July 16, 2017 3:38 AM
3 0
அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மூதூர் பிரதேசத்தில் மாவிலாறு குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரும் நேற்று (சனிக்கிழமை) மூதூரில் திருமண வீடொன்றுக்கு சென்ற போது, மாவிலாறு குளத்தைப் பார்வையிட சென்ற வேளை, படகில் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் கெக்குனுகொல்ல, அரக்கியால பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய எம்.என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் 18 வயதுடைய எம்.எச்.எம்.அப்துல்லாஹ் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும், சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0