Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அரசியல்களம் தாண்டி உச்சம் தொடும் சஜித்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் காணொளி

August 11, 2018 9:44 PM
3 0

இலங்கையின் அரசியல் களம் நாளுக்கு நாள் புது மாற்றங்களுடன் பயணித்து வரும் நிலையில், அரசியல்வாதிகளும் அதற்கேற்றாற் போல தமது அரசியல் பயணத்தை கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்ளும் பொதுமக்களும் உண்டு, அவர்களை நிராகரிக்கும் அல்லது வெறுக்கும் மக்களும் நமது நாட்டில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அதேபோல, அரசியல்வாதிகளில் அரசியல் தவிர்ந்த தமது தனிப்பட்ட பல செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர்களும் உண்டு, வெறுக்கப்பட்டவர்களும் உண்டு.

இந்நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாச தற்போது அரசியல் தவிர்ந்து தனது இசைத்திறமையால் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றார்.

பல வாத்தியக்கருவிகளை இசைக்கும் வல்லமைப்பெற்ற இவரின் அண்மைய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதற்கு முன்னர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் காலங்களிலும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் இது போன்ற பல காணொளிகள் வைரலாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0