Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அதிரடியாக அமைச்சர்களை நியமித்த மைத்திரி: இந்துமத விவகார பிரதி அமைச்சராக முஸ்லீம் எம்.பி!

June 12, 2018 7:16 AM
7 0
அதிரடியாக அமைச்சர்களை நியமித்த மைத்திரி: இந்துமத விவகார பிரதி அமைச்சராக முஸ்லீம் எம்.பி!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பான நிகழ்வு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர்களாக ரஞ்சித் அலுவிகார( சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அலுவல்கள்),

லகீ ஜயவர்தன( மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி ) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி அமைச்சர்களாக அஜித் மன்னப்பெரும(சுற்றாடல்), அங்கஜன் இராமநாதன்(விவசாயத்துறை),

காதர் மஸ்தான்( மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள்),

நளின் பண்டார( அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0