Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

அடையாறு முகத்துவாரத்தில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள் !

November 28, 2017 6:57 AM
1 0
அடையாறு முகத்துவாரத்தில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள் !

சென்னையில் உள்ள அசையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. காலையில் இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர்.

அதிகாரிகள் விரைந்து வந்து தற்போது அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடந்துள்ளனர்.

அதுபோல நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கடலில்லும் 15க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0